விளை நிலத்தில் காட்டுப் பன்றிக்காக வைத்த மின்வேலியில் சிக்கி ஆட்டோ டிரைவர் உயிரிழப்பு.!

0 887

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே வயல்வெளியில் காட்டுப் பன்றிக்காக வைத்த மின்வேலியில் சிக்கி ஆட்டோ டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

மானாமதுரையில் இருந்து மிளகனூர் செல்லும் பீசர்பட்டினம் பகுதியை சேர்ந்த ஸ்டீபன் ராஜ், தனது விளை நிலங்களில் காட்டுப் பன்றிகளின் அட்டகாசத்தை தடுக்க அனுமதியின்றி மின்வேலி அமைத்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் மிளகனூர் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் செந்தில் முருகன், சிறுநீர் கழிக்க வயல்வெளியில் இறங்கிய போது மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments