போரிஸ் ஜான்சன் அரசில் இருந்து இரண்டு அமைச்சர்கள் ராஜினாமா.!

இங்கிலாந்தின் நிதி மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.
ஆளும் கன்சர்வேடிவ் கட்சியின் எம்.பி.யான கிறிஸ் பின்ஷர் கடந்த புதன்கிழமை இரவு நேர கேளிக்கை விடுதியில் இரு ஆண்களிடம் பாலியல் ரீதியில் அநாகரிகமாக செயல்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. கட்சியின் துணை கொறடா பதவியில் இருந்து கிறிஸ் ராஜினாமா செய்த நிலையில், எம்.பி. பதவியில் இருந்தும் இடைநீக்கம் செய்யப்பட்டார்.
கிறிஸ்அரசுப் பதவிக்கு தகுதியில்லாதவர் என்று போரிஸ் ஜான்சன் மன்னிப்பு கோரினார். இந்நிலையில், அமைச்சர் பதவிகளை ராஜினாமா செய்துள்ள நிதி அமைச்சர் ரிஷி சுனக் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் சஜித் ஜாவித் ஆகியோர், கிறிஸ் மீதான பாலியல் குற்றச்சாட்டு விவகாரத்தை போரிஸ் ஜான்சன் அரசு சரிவர கையாளவில்லை எனத் தெரிவித்துள்ளனர்.
Comments