மகாபலிபுரம் சாலை விபத்தில் 2பேர் உயிரிழந்த சிசிடிவி வெளியீடு.!

0 5550

சென்னை பழைய மகாபலிபுரம் சாலையில் நிகழ்ந்த வாகன விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்த  சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. 

துரைப்பாக்கத்தைச் சேர்ந்த அபிஷ்க்சிங் மற்றும் மயிலாப்பூரைச் சேர்ந்த ரூபேஷ் ஆகியோர் சோழிங்கநல்லூரை நோக்கி இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.

செம்மஞ்சேரி ஆலமரம் பேருந்து நிறுத்தத்தை தாண்டி சென்றபோது இளைஞர்கள் சென்ற வாகனம் மற்றொரு வாகனத்தில் மோதி நிலைதடுமாறி கீழே விழுந்தது. அப்போது பின்னால் அதிவேகமாக வந்த சுற்றுலா வேன் இரு சக்கர வாகனத்தின்மீது மோதியதில் இருவரும் உயிரிழந்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments