மோசமான வானிலை உள்ளிட்ட காரணங்களால் கடந்த வாரத்தில் மட்டும் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விமான சேவைகள் ரத்து..!

0 540

அமெரிக்காவில் மோசமான வானிலை உள்ளிட்ட காரணங்களால் கடந்த வாரத்தில் மட்டும் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுதந்திர தின விடுமுறை கொண்டாட்டத்தை முன்னிட்டு மக்கள் பல்வேறு நாடுகளுக்கு சுற்றுலா செல்ல திட்டமிட்டுள்ளனர்.

ஏறத்தாழ நான்கு கோடியே 79 லட்சம் பேர் விமான டிக்கெட் முன்பதிவு செய்திருந்த நிலையில், கடந்த ஒரு நாளில் 280க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாகவும், 2 ஆயிரத்து 751 விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments