ஆன்லைன் ரம்மி விளையாடி சொந்த வீட்டிலேயே கை வைத்த நபர்.. அழுது ஓவர் பில்டப் கொடுத்து போலீசில் சிக்கிய சம்பவம்..

0 1297
நெல்லை மாவட்டம் உவரி அருகே ஆன்லைனில் ரம்மி விளையாடுவதற்காக சொந்த வீட்டிலேயே 12 சவரன் நகை மற்றும் பணத்தை திருடிய நபரை பிடித்த போலீசார், நகைகளை மீட்டனர்.

நெல்லை மாவட்டம் உவரி அருகே ஆன்லைனில் ரம்மி விளையாடுவதற்காக சொந்த வீட்டிலேயே 12 சவரன் நகை மற்றும் பணத்தை திருடிய நபரை பிடித்த போலீசார், நகைகளை மீட்டனர்.

அந்தோணி பாபு ஜார்ஜ் - சோபனா தம்பதி வங்கியில் அடமானம் வந்த நகையை மீட்டு வந்து வீட்டில் பீரோவில் வைத்துள்ளனர். நேற்று சோபனா பீரோவை திறந்து பார்த்த போது நகையும் 15 ஆயிரம் பணமும் காணாமல் போனதாக போலீசில் புகாரளித்தார்.

அவருடனே காவல்நிலையம் சென்ற அந்தோணி, நகை காணாமல் போனதாக கூறி அழுது ஓவர் பில்டப் கொடுத்துள்ளார்.

சந்தேகமடைந்த போலீசார், அந்தோணியை தனியாக அழைத்து தங்கள் பாணியில் விசாரித்தில் ஆன்லைன் ரம்மி விளையாட நகையை திருடிவிட்டு நாடகமாடியது அம்பலமானது. இதனையடுத்து அந்தோணி தனது கோழிப்பண்ணையில் குழி தோண்டி புதைத்து வைத்திருந்த நகையை போலீசார் மீட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments