நீதிமன்ற வளாகத்தில் ஆபாசமாக பேசி ரகளை.. போதை ஆசாமியை தூக்கிய போலீசார்..!

0 887

கோவையில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மதுபோதையில் ஆபாசமாக பேசி ரகளையில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்தனர்.

கண்ணம்பாளையத்தைச் சேர்ந்த நாகராஜ் என்பவர் வேன் டிரைவராக பணிபுரியும் நிலையில், தன் மீதான வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்திற்கு சென்றுள்ளார்.

அப்போது மதுபோதையில் இருந்த நாகராஜ் சத்தமாக பேசிக் கொண்டிருந்ததாகவும், அமைதியாக பேசும் படி ஊழியர்கள் கூறியதால் அவர் ஆபாசமாக பேசி ரகளையில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, நாகராஜை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments