500 ரூபாய் கேட்டால் 2500 ரூபாய் வழங்கிய ஏடிஎம் எந்திரம்.. ஏடிஎம் முன் திரண்ட மக்கள்.!

0 4593

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் அருகே தனியார் வங்கிக்கு சொந்தமான ஏடிஎம் எந்திரத்தில் 5 மடங்கு கூடுதலாக பணம் வந்ததால் ஏராளமானோர் திரண்டனர்.

அந்த ஏடிஎம் ல் 500 ரூபாய் எடுக்க வந்த ஒருவருக்கு 2500 ரூபாய் வந்ததால் ஆச்சரியம் அடைந்தார். மறுபடியும் அவர் 500 ரூபாய் கேட்க, மீண்டும் 2500 ரூபாயே வந்தது.

இந்த செய்தி காட்டுத்தீ போல் பரவியதால், அந்த ஏடிஎம் முன்பு ஏராளமானோர் திரண்டனர். தகவல் போலீசுக்கு போனதால் விரைந்து வந்த காவலர்கள் அந்த ஏடிஎம் ஐ நிறுத்தினர்.

100 ரூபாய் நோட்டுகளை வைக்க வேண்டிய இடத்தில் 500 ரூபாய் நோட்டுகளை தவறாக வைத்ததே இந்த குழப்பத்திற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments