பைக்கில் எடுத்து சென்ற போது தவறி விழுந்து வெடித்த நாட்டு வெடிகுண்டு.. ஒருவர் படுகாயம்..!

0 2146
பைக்கில் எடுத்து சென்ற போது தவறி விழுந்து வெடித்த நாட்டு வெடிகுண்டு.. ஒருவர் படுகாயம்..!

திருவள்ளூர் மாவட்டம் மாங்காடு அருகே பையில் எடுத்துச் சென்ற நாட்டு வெடிகுண்டு தவறி விழுந்து வெடித்ததில் ஒருவர் படுகாயடைந்தார்.

பரணிபுத்தூர் நான்கு சாலை சந்திப்பு பகுதியில் 3 பேர் ஒரு பைக்கில் சென்றுக்கொண்டிருந்த போது திடீரென பயங்கர சத்தத்துடன் ஒரு பொருள் வெடித்தது. இதில், அங்கிருந்த டீ கடையில் கண்ணாடியும் நொறுங்கியதோடு பைக்கில் சென்ற ஒருவர் படுகாயமடைந்தார்.

தகவலறிந்து வந்த போலீசார், விசாரணை நடத்தியதில், காயமடைந்தது ஐயப்பன்தாங்கலை சேர்ந்த வினோத்குமார் என்பதும், சரித்திர பதிவேடு குற்றவாளியான இவர் நண்பர்களுடன் சென்ற போது பேப்பர் பையில் எடுத்து சென்ற நாட்டு வெடிகுண்டு தவறி கீழே விழுந்து வெடித்தது தெரியவந்தது.

இதனையடுத்து சதி திட்டம் நிறைவேற்ற நாட்டு வெடிகுண்டுகளை எடுத்து சென்றார்களா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments