தனியார் பேருந்து உரிமையாளர் வீட்டின் பூட்டை உடைத்து தங்கம், வெள்ளி, வைரம், ரூ.2 லட்சம் பணம் கொள்ளை..!

0 2525
தனியார் பேருந்து உரிமையாளர் வீட்டின் பூட்டை உடைத்து தங்கம், வெள்ளி, வைரம், ரூ.2 லட்சம் பணம் கொள்ளை..!

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் தனியார் பேருந்து உரிமையாளர் வீட்டின் பூட்டை உடைத்து அரை கிலோ தங்கம், 15 கிலோ வெள்ளி உள்ளிட்ட பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.

தெற்கு பெரியார் நகரில் வசித்து வரும் ஜெயச்சந்திரன் என்பவர் இரண்டு நாட்களுக்கு முன்பு குடும்பத்துடன் குருவாயூர் சென்றுவிட்டு இன்று காலை வீடு திரும்பினார். 

வீட்டின் பீரோவில் இருந்த அரை கிலோ தங்கம், 15 கிலோ வெள்ளி, இரண்டு லட்சம் ரூபாய் மதிப்புள்ள வைர நகைகள் மற்றும் இரண்டு லட்சம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.

இதுகுறித்து விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து சிசிடிவியில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments