2-வது நாளாக தொழில்நுட்ப கோளாறு : 5 மணிநேர காத்திருப்புக்குப் பின் விமானம் ரத்து என அறிவித்ததால் பயணிகள் வாக்குவாதம்..!

0 2149
2-வது நாளாக தொழில்நுட்ப கோளாறு : 5 மணிநேர காத்திருப்புக்குப் பின் விமானம் ரத்து என அறிவித்ததால் பயணிகள் வாக்குவாதம்..!

மதுரையில் 2-வது நாளாக தொழில்நுட்ப கோளாறு காரணமாக துபாய் செல்லும் விமானம் ரத்து செய்யப்பட்டதால், பயணிகள் கடும் அவதியடைந்தனர்.

மதுரை விமான நிலையத்திலிருந்து நேற்று மாலை 4 மணிக்கு 169 பயணிகளுடன் துபாய் செல்ல இருந்த ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு கண்டறியப்பட்டு, பயணிகள் விமான நிலைய வளாகத்திற்குள் தங்க வைக்கப்பட்டனர்.

விமானம் புறப்படும் நேரம் குறித்து எந்த விளக்கமும் அளிக்காமால் சுமார் 5 மணிநேரம் காத்திருப்புக்குப் பின் விமானம் ரத்து என அறிவிக்கப்பட்டதால் கடும் அவதியடைந்த பயணிகள், ஸ்பைஸ் ஜெட் நிர்வாகிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments