3 நாள் வேலைநிறுத்தப் போராட்டம்.. மாற்றுப் பணியாளர்களைக் கொண்டு ரேஷன் கடைகளை திறக்க கூட்டுறவுத்துறை உத்தரவு..!

0 3362

அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் நியாயவிலைக் கடை பணியாளர்கள் இன்று முதல் 3 நாட்களுக்கு வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், பொதுமக்கள் பாதிக்காத வகையில் மாற்று நடவடிக்கைகளை மேற்கொள்ள கூட்டுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது.

போராட்டத்தில் ஈடுபடும் பணியாளர்களுக்கு பதிலாக மாற்றுப் பணியாளர்களை கொண்டு கடைகள் திறக்கப்பட்டு, செயல்படுவதை உறுதி செய்ய அனைத்து மண்டல இணைப்பதிவாளர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் பணியாளர்களுக்கு " No work No pay" என்ற அடிப்படையில் சம்பளம் பிடித்தம் செய்யவும் பணியாளர்களின் விவரங்களை நாள்தோறும் பதிவாளர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கவும் உத்தரவிட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments