பாகிஸ்தானில் குழந்தைகள் மருத்துவமனையில் திடீர் தீ விபத்து.!

0 1720

பாகிஸ்தானின் லாகூரில் உள்ள குழந்தைகள் மருத்துவமனையில் திடீரென பெரும் தீ விபத்து ஏற்பட்டது. குல்பெர்க் பகுதியில் செயல்பட்டு வரும் மருத்துவமனையில் பற்றிய தீ, மற்ற பகுதிகளுக்கும் பரவி கடும் புகை மூட்டமானது.

தொடர்ந்து, 3-வது மாடியில் உள்ள மருந்துக் கிடங்கிற்கு முழுவதுமாக தீ பரவியதால், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான மருந்து பொருட்கள் தீயில் எரிந்து சாம்பலானது.

தகவலறிந்து 7 தீயணைப்பு வாகனங்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீ விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments