குறுவை சாகுபடி பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து 3 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு.!

சேலம் மாவட்டம் மேட்டூர் அணையிலிருந்து குறுவை சாகுபடி பாசனத்திற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தண்ணீரை மலர் தூவி திறந்து வைத்தார்.
ஆண்டுதோறும் மேட்டூர் அணையில் இருந்து குறுவை சாகுபடி பாசனத்திற்கு ஜூன் 12ஆம் தேதி தண்ணீர் திறக்கப்படும்.
இந்நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக மேட்டூர் அணையின் நீர் மட்டம் வேகமாக உயர்ந்து 117 அடியை எட்டியது.
இதனால் தண்ணீர் திறக்க ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில் அணையின் வலது கரையில் உள்ள எட்டு கண் மதகு வழியாக முதற்கட்டமாக 3 ஆயிரம் கனஅடி தண்ணீரை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
அப்போது அமைச்சர்கள் துரைமுருகன், கே .என். நேரு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இதனையடுத்து அணைப்பகுதியில் இருந்த விவசாயிகளை சந்தித்த முதலமைச்சர் அவர்களிடம் மனுக்களையும் பெற்று குறைகளை கேட்டறிந்தார்.
Comments