டிரம்முக்குள் வைத்து புதைக்கப்பட்ட முதியவர் உடல் தோண்டியெடுப்பு.!

0 2707

இராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கத்தில் டிரம்முக்குள் வைத்து புதைக்கப்பட்ட முதியவரின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டு பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது.

சொத்துத் தகராறில் சென்னையைச் சேர்ந்த முதியவர் குமரேசன் என்பவரை அவரது மகன் குணசேகரன் என்பவனே கொடூரமாகக் கொன்று டிரம்முக்குள் அடைத்து, காவேரிப்பாக்கம் கொண்டு வந்து காலி மனை ஒன்றில் புதைத்த நிகழ்வு அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

டிரம்முக்குள் செய்வினை பூஜை செய்யப்பட்ட பொருட்கள் இருப்பதாக நில உரிமையாளரை ஏமாற்றி, அவர்  உதவியுடனேயே அதனை மண்ணுக்குள் புதைத்துவிட்டு தப்பிச் சென்றவனை போலீசார் தேடி வருகின்றனர்.

இந்த நிலையில், நில உரிமையாளர் வெங்கடேசன் அடையாளம் காட்டிய இடத்தில் இருந்து குமரேசன் உடல் அடங்கிய டிரம் தோண்டி எடுக்கப்பட்டு பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments