சாலையோரம் நடந்து சென்றவர்கள் மீது கார் மோதி விபத்து ; ஒருவர் நிகழ்விடத்திலேயே பலி

0 3289
சாலையோரம் நடந்து சென்றவர்கள் மீது கார் மோதி விபத்து ; ஒருவர் நிகழ்விடத்திலேயே பலி

பெங்களூரு அருகே சாலையோரம் நடந்து சென்றவர்கள் மீது கார் மோதியதில் ஒருவர் உயிரிழந்தார்.வெளிவட்டச் சாலையில் சென்ற கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் சென்ற 4 பேர் மீது மோதியது.

இதில், அந்த நான்கு பேரும் தூக்கி வீசப்பட்ட நிலையில், விபத்தை ஏற்படுத்திய கார் சாலையோரம் இருந்த மற்றொரு கார் மீது மோதி நின்றது.

விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில், 3 பேர் படுகாயமடைந்தனர். இது குறித்து, ஓட்டுநர் கைது செய்யப்பட்ட நிலையில், அவர் மதுபோதையில் வாகனத்தை இயக்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments