விழுப்புரம் தாட்கோ அலுவலகத்தில் பெண் அதிகாரியை மிரட்டும் அரசியல் கட்சி பிரமுகர்

0 10139

விழுப்புரம் தாட்கோ அலுவலகத்தில் நுழைந்து, தகாத வார்த்தைகளால் தன்னைப் பேசி மிரட்டியதாக அரசியல் கட்சி பிரமுகர்  மீது பெண் அதிகாரி புகார் அளித்துள்ளார்.

இந்த அலுவலகத்தில் செயற்பொறியாளராக பணியாற்றி வரும் அன்புதேவகுமாரியிடம்  நேற்று அரசியல் கட்சி பிரமுகர் ஒருவர் தனது ஆதரவாளர்களுடன் சென்று நிராகரிக்கப்பட்ட மனு ஒன்றை  ஏற்கச் சொல்லி கேட்டதாக கூறப்படுகிறது.

இதற்கு மறுப்பு தெரிவித்த பெண் அதிகாரியிடம், வாக்குவாதத்தில் ஈடுபட்ட அரசியல் பிரமுகர் ஆத்திரத்தில் தகாத வார்த்தையால் திட்டியதோடு மிரட்டல் விடுத்தும் பேசிய வீடியோ வெளியாகி உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments