உயிரிழந்த தாயின் உடலை மகனே ட்ரமில் போட்டு மூடிய சம்பவம்... போலீசார் விசாரணை.!

0 3473

சென்னை நீலாங்கரையில் உடல் நலக்குறைவால் உயிரிழந்த தாயின் உடலை, அவரது மகனே ட்ரமில் போட்டு சிமெண்ட் மூலம் பூசி மூடியதாக கூறப்படும் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நீலாங்கரை சரஸ்வதி நகரை சேர்ந்த 86 வயதான மூதாட்டி செண்பகம், அவரது மகன் சுரேஷ் உடன் வசித்து வந்தார்.

53 வயதான சுரேஷ் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதால் அவரது மனைவி, குழந்தைகளுடன் பிரிந்து சென்றதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில், செண்பகத்தை கடந்த சில நாட்களாக காணவில்லை என அக்கம்பக்கத்தினர் சுரேஷிடம் கேட்டபோது, அவர் உடல்நலக்குறைவால் உயிரிழந்து விட்டதாகவும், அதனால் உடலை வீட்டில் இருந்த ட்ரம்மில் போட்டு மூடி சிமெண்ட் வைத்து பூசி மூடி விட்டதாகவும் கூறியுள்ளார்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் மூதாட்டியின் உடல் இருப்பதாக கூறப்படும் ட்ரம்பை மீட்டு உடற்கூராய்விற்கு அனுப்பினர்.

மேலும், சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், உடல்நலக்குறைவு காரணமாக மூதாட்டி உயிரிழந்தாரா அல்லது உயிருடன் ட்ரம்பில் அடைத்து கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் மூதாட்டியின் மகன் சுரேஷிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments