டெல்லியில் 36 பெண்களை திருமண ஆசை காட்டி ஏமாற்றி பல லட்சம் ரூபாய் சுருட்டிய நபர் கைது.!

0 3444

டெல்லியில் 36 பெண்களை திருமண ஆசை காட்டி ஏமாற்றி பல லட்சம் ரூபாய் சுருட்டிய ஃபர்ஹான் கான் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இணையத்தில் திருமண பதிவு மையத்தில் பல்வேறு போலி பெயர்களில் வரன் தேடுவதாக அறிவித்த அந்த மோசடிப் பேர்வழி, ஒரு பெண்ணிடம் 15 லட்சம் ரூபாய் பணம் பெற்று திருமணம் செய்யாமல் ஏமாற்றியதாக புகார் எழுந்துள்ளது.

போலீசார் விசாரித்த போது இதே போல் 36 பெண்களை ஏமாற்றி இருப்பதாகவும் பலரிடம் பணம் வாங்கி இருப்பதாகவும் ஃபர்ஹான் ஒப்புக் கொண்டார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments