மறைந்த தருமபுரம் ஆதீன கர்த்தர்கள் குருமூர்த்தத்தில் ரூ.50 ஆயிரம் மதிப்பிலான 5 கோபுர கலசங்கள் திருட்டு!

0 1162

மயிலாடுதுறையில், மறைந்த தருமபுரம் ஆதீன கர்த்தர்கள் குருமூர்த்தத்தில் 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 5 விமான கோபுர கலசங்கள் திருட்டு போனதாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

காவிரிக்கரை செல்லும் திருமஞ்சன வீதியில் தருமபுரம் ஆதீன கர்த்தர்களாக இருந்து மறைந்தவர்கள் அடக்கம் செய்யப்பட்ட குருமூர்த்தம் எனும் நினைவிடம் உள்ளது.

இந்த குருமூர்த்தத்தின் விமானத்திலிருந்த 1 கலசமும் நுழைவாயிலின் மேல் பகுதியில் இருந்த 4 கலசங்களும் திருட்டு போனதாக ஆதீனத்தின் பொது மேலாளர் புகார் அளித்துள்ளார்.

புகாரின் பேரில், அப்பகுதியில் உள்ள சிசிடிவி பதிவுகளை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments