அரசு பேருந்தில் ஏறி ஆய்வு...நடத்துனரிடம் பள்ளி நாட்கள் நினைவுகளை பகிர்ந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் அரசு பேருந்தில் ஆய்வு செய்த முதலமைச்சர், மகளிர், மாற்றுத் திறனாளிகள், திருநங்கைகளுக்கு முறையாக இலவச டிக்கெட் வழங்கப்படுகிறதா? என நடத்துனரிடம் கேட்டறிந்தார்.
பெரம்பூர் - பெசன்ட் நகர் செல்லும் 29சி என்ற எண் கொண்ட பேருந்தில் ஏறி ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பெண்கள் மற்றும் பயணிகளின் குறைகளையும் கேட்டறிந்தார்.
அப்போது தன் பள்ளிநாட்களில் 29சி பேருந்தில் பயணித்ததை அவர் நினைவுகூர்ந்தார்.
Comments