ஐரோப்பிய சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு தாயகம் திரும்பினார் பிரதமர் மோடி..!

ஐரோப்பிய சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு தாயகம் திரும்பினார் பிரதமர் மோடி..!
ஐரோப்பாவில் மூன்று நாடுகளின் சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் நரேந்திர மோடி டெல்லிக்குத் திரும்பினார்.
ஜெர்மனி, டென்மார்க், பிரான்ஸ் நாடுகளில் சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு தனி விமானத்தில் திரும்பிய பிரதமர் மோடி டெல்லி வந்தடைந்தார். விமான நிலையத்தில் அதிகாரிகள் அவரை வரவேற்றனர்.
நாடு திரும்பிய பிரதமர் உடனடியாக அலுவலகத்துக்குச் செல்வதாகவும், இன்று ஒருநாளில் 8 கூட்டங்கள், சந்திப்புகளை அவர் நடத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது. தென்மேற்குப் பருவமழைக் கால முன்னெச்சரிக்கை நடவடிக்கை, அனல்காற்றுப் பாதிப்பைத் தணிக்க எடுக்கும் நடவடிக்கை குறித்தும் பிரதமர் ஆலோசிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
Comments