திருச்சியில் 1000 சிறுவர், சிறுமியர் இணைந்து சிவன் பாடலுக்கு பரதநாட்டியம் ஆடி அசத்தல்.!

0 1961

திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலில் தனியார் அகாடமி சார்பில் ஒரே நேரத்தில் 1000 சிறுவர், சிறுமியர் இணைந்து சிவன் பாடலுக்கு பரதநாட்டியம் ஆடினர்.

வயலின், புல்லாங்குழல், மிருதங்கம் இசைத்து, போ சம்போ என்ற சிவன் பாடலை வாய்ப்பாட்டு கலைஞர்கள் பாட சிறுவர், சிறுமியர் நாட்டிய உடையில் நடனமாடியது காண்போரை வெகுவாக கவர்ந்தது.

நகர்ப்புற உள்ளாட்சி துறை அமைச்சர் கே.என். நேரு இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நடனமாடிய சிறுவர், சிறுமியருக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments