இந்தியாவின் மருந்து ஏற்றுமதி 8 ஆண்டுகளில் 103 விழுக்காடு அதிகரிப்பு - மத்திய அரசு

இந்தியாவின் மருந்து ஏற்றுமதி 8 ஆண்டுகளில் 103 விழுக்காடு அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
2021 - 2022 நிதியாண்டில் ஒரு இலட்சத்து 83 ஆயிரத்து 422 கோடி ரூபாய் அளவுக்கு மருந்து ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக வணிகம் மற்றும் தொழில்கள் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
விலை மலிவு, நல்ல தரம் ஆகியவற்றால் உலக அளவில் தடுப்பு மருந்து ஏற்றுமதியில் 60 விழுக்காட்டையும், பொதுவான மருந்து ஏற்றுமதியில் 20 விழுக்காட்டையும் இந்திய நிறுவனங்கள் கொண்டுள்ளன.
Comments