குடும்பத் தகராரால் தீக்குளித்த மனைவி...காப்பாற்ற முயன்ற கணவர் மீதும் பற்றிய தீ..இருவரும் உயிரிழந்த சோகம்!

0 2654

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே குடும்பத் தகராறில் தீக்குளித்த மனைவியை காப்பாற்றச் சென்ற கணவர் மீதும் தீப்பற்றியதில் அவரும் உயிரிழந்தார்.

கடையநல்லூரைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் - மேனகா தம்பதிக்கு ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் திருமணமான நிலையில், தம்பதிக்கு குழந்தை இல்லை.

கடந்த 3 மாதங்களாக இந்த தம்பதி, சேர்ந்தமரம் பகுதியிலுள்ள மேனகாவின் அண்ணன் வீட்டில் வசித்து வந்துள்ளனர்.

ராதாகிருஷ்ணன் சரியாக வேலைக்குச் செல்வதில்லை என்று கூறப்படும் நிலையில், அதன் காரணமாக இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

திங்கட்கிழமை இரவு கணவனை மேனகா தரக்குறைவாகப் பேசியதாகக் கூறப்படும் நிலையில், மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.

அப்போது மேனகா வீட்டிலிருந்த மண்ணெண்ணையை எடுத்து உடலில் ஊற்றிக் கொண்டு தீ வைத்துள்ளார்.

பதறிப்போன ராதாகிருஷ்ணன், மனைவியைக் காப்பாற்ற முயன்றபோது, அவர் மீதும் தீப்பிடித்துள்ளது.

அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து தீயை அணைத்து இருவரையும் காப்பாற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், வழியிலேயே இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments