சென்னை கடற்கரை ரயில் நிலைய மின்சார ரயில் விபத்திற்கு என்ஜின் ஓட்டுநரின் கவனக்குறைவுதான் காரணம் என தகவல்.!

0 3732

சென்னை கடற்கரை ரயில் நிலைய மின்சார ரயில் விபத்திற்கு என்ஜின் ஓட்டுநரின் கவனக்குறைவுதான் காரணம் என தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை, பணிமனையில் இருந்து கடற்கரை ரயில் நிலையத்திற்கு மின்சார ரயில் கொண்டுவரும் போது கட்டுப்பாட்டை இழந்து நடைமேடை மீது ஏறி விபத்து ஏற்பட்டது.

விபத்தில் உயிர்தப்பிய ஓட்டுநர் பவித்ரன், பிரேக் பழுதால் அவ்வாறு நிகழ்ந்ததாக கூறினார். விபத்து தொடர்பாக தெற்கு ரயில்வே, தொழில் நுட்ப வல்லுநர்கள் அடங்கிய விசாரணை குழுவை அமைத்தனர்.

அதன் விசாரணையில், ரயிலை நிறுத்துவதற்கான லீவருக்கு பதில் வேகத்தை அதிகரிக்கும் லீவரை மாற்றி இயக்கி இருந்தால், விபத்து ஏற்பட வாய்ப்பிருப்பதாக சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments