ரியல் எஸ்டேட் தொழிலதிபர் கழுத்தை அறுத்து கொலை.. வீட்டில் இருந்த ரூ.20,000 பணம், 100 சவரன் நகை கொள்ளை

0 3096
ரியல் எஸ்டேட் தொழிலதிபர் கழுத்தை அறுத்து கொலை.. வீட்டில் இருந்த ரூ.20,000 பணம், 100 சவரன் நகை கொள்ளை

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அருகே தொழிலதிபரை கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு, 100 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக 4 தனிப்படை போலீசார் மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

ஆவுடையார் பட்டினம் கிராமத்தைச் சேர்ந்த முஹம்மது நிஜாம், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில், நேற்று நள்ளிரவு அவரது வீட்டிற்குள் புகுந்த 3 மர்ம நபர்கள், முஹம்மது நிஜாமை கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு, அவரது மனைவி ஆயிஷா பீவியை கட்டிப்போட்டு வீட்டில் இருந்த 20 ஆயிரம் ரூபாய் பணம், 100 சவரன் தங்க நகையை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

தகவலறிந்து உடலை கைப்பற்றிய காவல்துறையினர், நகைக்காகவா அல்லது முன் விரோதம் காரணமாக முஹம்மது நிஜாம் கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே, சம்பவ இடத்தில் ஆய்வு செய்த திருச்சி மண்டல காவல்துறைத் துணைத் தலைவர் சரவண சுந்தர், சிசிடிவி கேமரா, செல்போன் டவர் பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments