டெல்லியில் ஒரே நாளில் 1009 பேருக்கு புதிதாகக் கொரோனா பாதிப்பு.. பாதிப்பு 60 சதவீதம் எகிறியதால் நான்காவது அலை குறித்த பீதி

0 2446
டெல்லியில் ஒரே நாளில் 1009 பேருக்கு புதிதாகக் கொரோனா பாதிப்பு.. பாதிப்பு 60 சதவீதம் எகிறியதால் நான்காவது அலை குறித்த பீதி

டெல்லியில் ஒரே நாளில் புதிதாக ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று பரவியது.

ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 60 சதவீதம் அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். டெல்லி நகரில் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்கி அரசு உத்தரவிட்டுள்ளது.

முகக்கவசம் அணியாதவர்களுக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவிட் நோயாளிகளின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக் கூடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. புதிய உருமாற்ற வைரஸ் வடிவமான XE பாதிப்பு இருக்கிறதா என்று கண்டறிய முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments