புதுக்கோட்டையில் தண்ணீர் இறைக்கும் போது கிணற்றுக்குள் தவறி விழுந்த மூதாட்டியை பத்திரமாக மீட்ட தீயணைப்பு வீரர்கள்.!

0 5718

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே, தண்ணீர் இறைக்கும் போது கிணற்றுக்குள் தவறி விழுந்த மூதாட்டியை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.

புதுப்பட்டி கிராமத்தை சேர்ந்த கோமதி என்ற மூதாட்டி, தனது வீட்டில் உள்ள கிணற்றில் நீர் இறைத்துக் கொண்டிருந்தார். அப்போது கால் இடறி சுமார் 20 அடி ஆழங்கொண்ட கிணற்றுக்குள் தவறி விழுந்த மூதாட்டி, கிணற்றில் இருந்த மோட்டார் பைப்பை பிடித்துக் கொண்டு நீரில் தத்தளித்தவாறு கூச்சலிட்டுள்ளார்.

அக்கம் பக்கத்தினர் கொடுத்த தகவலின் பேரில் விரைந்து சென்ற தீயணைப்புத் துறையினர், கிணற்றுக்குள் இறங்கி நீரில் தத்தளித்துக் கொண்டிருந்த மூதாட்டியை கயிற்றைக் கட்டி பத்திரமாக மீட்டனர். 

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments