ரஷ்யாவிடம் இந்தியா குறைந்த விலையில் கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வது அமெரிக்காவின் தடையை மீறிய செயல் அல்ல - வெள்ளை மாளிகை

0 2671
ரஷ்யாவிடம் இந்தியா குறைந்த விலையில் கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வது அமெரிக்காவின் தடையை மீறிய செயல் அல்ல

ரஷ்யாவிடம் இந்தியா குறைந்த விலையில் கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வது அமெரிக்காவின் தடையை மீறிய செயல் அல்ல என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

இது குறித்து வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய செய்தித் தொடர்பாளர் ஜென் சாகி, இந்தியாவின் கொள்முதல் ஒன்று அல்லது இரண்டு சதவீதம் தான் என்று தெரிவித்தார்.

பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இடையே காணொலி வாயிலாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஜோ பைடன் இதனை குறிப்பிட்டுள்ளதாகவும் ஜென் சாகி தெரிவித்தார்.

எதிர்காலத்தில் ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் கொள்முதலை நிறுத்தும்படி கோரிய ஜோபைடன் மோடியிடம் இதற்கான உறுதிமொழியை கேட்டாரா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதில் அளித்த ஜென் சாகி, ஒவ்வொரு நாடும் தங்களுக்கு ஏற்ற நிலைப்பாட்டை எடுக்கலாம், இது குறித்து பிரதமர் மோடியும் இந்திய மக்களும் முடிவு செய்யட்டும் என்று கூறினார்.அமெரிக்காவிடம் இருந்து அதிகளவில் இந்தியா எண்ணெய் இறக்குமதி செய்து வருவதாகவும் ஜென் சாகி தெரிவித்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments