கன்னியாகுமரியில் கடன் கேட்டு கொடுக்காத ஆத்திரத்தில் டைல்ஸ் கடை உரிமையாளர் மீது தாக்குதல் - சிசிடிவி வெளியீடு

0 2548

கன்னியாகுமரியில் கடனாக 10 ஆயிரம் ரூபாய் பணம் கேட்டு கொடுக்காத ஆத்திரத்தில், டைல்ஸ் கடை உரிமையாளரை அவரது வீட்டின் முன்பு வைத்து நபர் ஒருவர் இரும்பு கம்பியால் சரமாரியாக தாக்கிவிட்டு தப்பி சென்ற காட்சி சிசிடிவியில் பதிவாகியுள்ளது.

திக்கணம்கோட்டை அடுத்த மாங்கோடு பகுதியில் ரவி என்பவர் டைல்ஸ் கடை நடத்தி வருகிறார். அவரிடம் இருந்து கடனுக்கு டைல்ஸ் வாங்கிய அதே பகுதியைச் சேர்ந்த ஜான் கிறிஸ்டோபர் என்பவர், கடன் பாக்கியான ஒன்றரை லட்சத்தை திருப்பி கொடுத்ததுவிட்டு ரவியிடம் மேலும் 10 ஆயிரம் ரூபாய் கடன் கேட்டதாக கூறப்படுகிறது.

கடன் கொடுக்க ரவி மறுப்பு தெரிவித்ததாக கூறப்படும் நிலையில்,ஆத்திரமடைந்த ஜான் கிரிஸ்டோபர், ரவி இரவில் வீடு திரும்பிய போது இரும்பு கம்பியால் தாக்கியுள்ளார். படுகாயமடைந்த ரவி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில்,  தப்பியோடிய ஜான் கிரிஸ்டோபரை போலீசார் தேடி வருகின்றனர்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments