ஆன்லைன் ரம்மியால் கடனாளி ஆன ஒருவரின் பாதி எரிந்த நிலையிலான சடலம் கைப்பற்றப்பட்டு விசாரணை

0 1118
ஆன்லைன் ரம்மியால் கடனாளி ஆன ஒருவரின் பாதி எரிந்த நிலையிலான சடலம் கைப்பற்றப்பட்டு விசாரணை

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே ஆன்லைன் ரம்மியால் கடனாளி ஆன ஒருவரின் பாதி எரிந்த நிலையிலான சடலம் கைப்பற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

கூடநகரம் பகுதியை சேர்ந்த அசோகா என்ற அந்த நபர், ஓசூரில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து, பின் வேலையை விட்டுவிட்டு சில நாட்களாக வீட்டில் இருந்து வந்துள்ளார்.

ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு அடிமையான அசோகா, அதற்காக ஊரைச் சுற்றி பலரிடம் கடன் வாங்கி இருந்தார் என்று கூறப்படுகிறது. இவரது செயல்பாடுகளால் வெறுத்துப் போன மனைவி இவரைப் பிரிந்து தாய் வீட்டுக்குச் சென்ற நிலையில் தனியாக வசித்து வந்துள்ளார் அசோகா.

இந்த நிலையில், அவரது வீட்டுக்குப் பின்புறம் உள்ள காலி இடத்தில் உடல் பாதி எரிந்து சிதைந்த நிலையில் அசோகாவின் சடலம் கிடந்துள்ளது. தகவலறிந்து வந்த போலீசார், கடன் தொல்லையால் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டாரா அல்லது கொலையா என விசாரித்து வருகின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments