அரசு குளிர்சாதனப் பேருந்தில் பயங்கரத் தீ விபத்து.. ஒரு மணி நேரப் போராட்டத்துக்குப் பின் தீ அணைக்கப்பட்டது
அரசு குளிர்சாதனப் பேருந்தில் பயங்கரத் தீ விபத்து.. ஒரு மணி நேரப் போராட்டத்துக்குப் பின் தீ அணைக்கப்பட்டது
டெல்லியில், அரசு குளிர்சாதனப் பேருந்தில் ஏற்பட்ட தீ அருகில் இருந்த கடைகளுக்குப் பரவியதில் 3 கடைகள் எரிந்து சேதமடைந்தன.
மஹிபால்பூர் பகுதி வழியாக சென்ற காலி குளிர்சாதனப் பேருந்து திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியது.
காற்று வேகமாக வீசியதால் அருகில் இருந்த கடைகளுக்கும் தீ பரவியது. 9 தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரத்துக்கு மேலாக போராடி தீயை அணைத்தனர்.
அதற்குள், ஏசி எந்திரங்கள் விற்கும் 3 கடைகள் எரிந்து சேதமடைந்தன. அதிர்ஷ்டவமாகத் தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
Comments