"கோரக்பூர்" தொகுதியில் போட்டியிடுகிறார் யோகி ஆதித்யநாத்

0 2950

உத்தர பிரதேச சட்டமன்றத் தேர்தலில், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தனது சொந்த எம்.பி தொகுதியான கோரக்பூரில் போட்டியிட உள்ளார்.

முதல் முறையாக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட உள்ள யோகி ஆதித்யநாத், அயோத்தி அல்லது மதுரா போன்ற கோவில் நகரங்களில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், சட்டமன்றத் தேர்தலுக்கான முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. இதில், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கோரக்பூர் தொகுதியில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. யோகி ஆதித்யநாத் ஏற்கனவே 5 முறை கோராக்பூரில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments