அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை காண வந்த 18 வயது இளைஞர் காளை முட்டியதில் உயிரிழப்பு..!

0 4383

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை காண வந்த 18 வயது இளைஞர் காளை முட்டியதில் உயிரிழந்தார்.

மாடுகள் வெளியேறும் இடத்திற்கு அருகே ஜல்லிக்கட்டு போட்டி அரங்கத்தில் இருந்த பாலமுருகன் என்பவரின் நெஞ்சுப்பகுதியில் காளை ஒன்று பலமாக முட்டியது.

இதனால் பலத்த காயமடைந்த அவர், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டியில் காளைகள் முட்டியதில் சுமார் 60 பேர் காயமடைந்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments