மேற்கு வங்க மாநிலம் ஜல்பைகுரி அருகே ரயில் தடம் புரண்ட விபத்தில் பலி எண்ணிக்கை 9ஆக உயர்வு

0 2904

மேற்குவங்கத்தில் கவுஹாத்தி - பிகானீர் விரைவு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.

பீகாரின் பாட்னாவில் இருந்து அசாம் மாநிலத்தில் உள்ள கவுஹாத்தி நோக்கி சென்று கொண்டிருந்த அந்த ரயில் நேற்று மாலை 5 மணியளவில்  மேற்குவங்கத்தில்  உள்ள ஜல்பைகுரி மாவட்டத்தில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது.

இதில் ரயிலின் 12 பெட்டிகள் பாதிக்கப்பட்டிருந்த  நிலையில் அவற்றுள் 5 பெட்டிகள் கவிழ்ந்தன. இந்த கோர விபத்தில் சம்பவ இடத்திலேயே 3 பேர் உயிரிழந்தனர். இடிபாடுகளுக்குள் சிக்கி படுகாயமடந்த 45-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர்களில் 6 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments