"சட்டைக்குள் சாராயம் - ஊரடங்கிலும் வியாபாரம் " : உடலில் சாராய பாக்கெட்டுகளை ஆடை போல் கட்டி வந்த குடிமகன்

0 4573

சினிமா ஒன்றில் எண்ணெய் உற்பத்தி ஆலையில் இருந்து எண்ணெய் பாட்டில்களை திருடி, உடலில் கட்டி எடுத்துச் செல்லும் நடிகர் செந்திலைப் போல, புதுச்சேரியில் இருந்து சாராய பாக்கெட்டுகளை வாங்கி உடல் முழுவதும் கட்டி எடுத்து வந்த நபர் கடலூர் போலீசாரிடம் சிக்கினார்.

தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் நிலையில், அண்டை மாநிலமான புதுச்சேரியில் மதுக்கடைகள் இயங்கி வருகின்றன.

அங்கு சிறு சிறு பாலிதீன் பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் மலிவு விலை சாராயமும் சகஜமாகக் கிடைப்பதாக சொல்லப்படுகிறது. இதனால் கடலூர் பகுதியைச் சேர்ந்த குடிமகன்கள், புதுச்சேரிக்குப் படையெடுக்கின்றனர்.

அப்படி புதுச்சேரி பகுதியில் இருந்து சாராய பாக்கெட்டுகளை வாங்கி உடல் முழுவதும் கயிறு போட்டு கட்டி, மேலே சட்டை ஒன்றை அணிந்து கொண்டு ஒன்றும் தெரியாதவர் போல் நடந்து வந்த நபர் ஒருவரை கங்கணாங்குப்பம் பகுதியில் வைத்து போலீசார் மடக்கினர்.

அவரை பரிசோதித்ததில் சுமார் 40 பாக்கெட்டுகள் சிக்கின. இதனையடுத்து வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments