முழு ஊரடங்கு அச்சம் - சொந்த ஊர்களுக்கு திரும்பும் வட மாநில தொழிலாளர்கள்.!

0 8742

முழு ஊரடங்கு அச்சம் காரணமாக திருப்பூரில் தங்கி பணியாற்றி வரும் வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக ரயில் நிலையங்களில் குவிந்துள்ளனர்.

திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனங்களில் ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிறு முழு ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ள நிலையில், மீண்டும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்படுமோ என்ற அச்சம் காரணமாக வட மாநில தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பி வருகின்றனர்.

சொந்த மாநிலங்களுக்கு செல்வதற்காக திருப்பூ ரயில் நிலையத்தில் குவிந்துள்ள வடமாநில தொழிலாளர்கள், இரவு நேர ரயில்களுக்காக காலை முதலே காத்திருந்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments