புத்தாண்டின் முதல் வேலை நாளிலேயே மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 507 புள்ளிகள் உயர்வு.!

0 5819

புத்தாண்டின் முதல் வேலை நாளிலேயே மும்பை பங்குச்சந்தையில் வணிகம் ஏற்றமடைந்து சென்செக்ஸ் ஐந்நூறு புள்ளிகளுக்கு மேல் உயர்ந்துள்ளது.

பங்குச்சந்தைகளில் புத்தாண்டு, ஞாயிறு விடுமுறைக்குப் பின் இந்த ஆண்டின் முதல் வணிகம் இன்று தொடங்கியது. தொடக்கத்தில் இருந்தே முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்கியதால் வணிகம் ஏற்றமடைந்தது.

பத்தேகால் மணியளவில் மும்பை பங்குச்சந்தைப் பங்குவிலைக் குறியீடு சென்செக்ஸ் 507 புள்ளிகள் உயர்ந்து 58 ஆயிரத்து 761 ஆக இருந்தது. தேசியப் பங்குச்சந்தைப் பங்குவிலைக் குறியீடு நிப்டி 141 புள்ளிகள் உயர்ந்து 17 ஆயிரத்து 495 ஆக இருந்தது.

வாகனத் தயாரிப்பு நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் பங்கு விலை 3 விழுக்காடு வரை உயர்ந்தது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments