தடையை மீறி மஞ்சுவிரட்டில் கலந்துக்கொண்ட 6 பேருக்கு காயம்.. போலீசார் வழக்கு பதிவு

0 2528

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே ஊர்குளத்தான்பட்டியில் மார்கழி வெள்ளியை முன்னிட்டு தடையை மீறி நடைபெற்ற மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியில் 6 பேர் காயமடைந்தனர்.

மினி சரக்கு வண்டிகளில் ஏற்றி வரப்பட்ட 200-க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்க்கப்பட்ட நிலையில், அவற்றை இளைஞர்கள் பலர் விரட்டி பிடித்தனர்.

சீறிப் பாய்ந்த காளைகள் முட்டியதில் 3 பேருக்கு லேசான காயமும், மேலும் 3 பேருக்கு படுகாயமும் ஏற்பட்டது.

அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், அனுமதி பெறாமல் மஞ்சுவிரட்டு நடத்திய ஊர்குளத்தான்பட்டியைச் சேர்ந்த 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments