வீட்டின் முன்பு நிறுத்திவைக்கப்பட்டிருந்த, விலையுயர்ந்த இருசக்கர வாகனம் திருட்டு..!

0 2438

சென்னை அம்பத்தூரில் வீட்டின் முன்பு நிறுத்திவைக்கப்பட்டிருந்த விலையுயர்ந்த இருசக்கர வாகனத்தை, நள்ளிரவில் இரண்டு மர்ம நபர்கள் திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

சுலைமான் என்ற இளைஞர் தனது R.1.5 பைக்- ஐ வழக்கம் போல வீட்டின் வாசலில் நிறுத்திவிட்டு உறங்கியுள்ளார். மறுநாள் காலை வந்து பார்க்கையில் பைக் காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து, அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவை தானே ஆய்வு செய்ததில், இரண்டு மர்ம நபர்கள் அவரது பைக்கின் லாக்கை உடைத்து பைக்கை திருடிச் சென்ற காட்சிகள் பதிவாகியிருந்தது.

அந்த வீடியோ பதிவுகளுடன், கொரட்டூர் காவல் நிலையத்தில் சுலைமான் அளித்த புகாரின் பேரில், போலீசார் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments