பிரதமர் மோடி இன்று வாரணாசி தொகுதிக்குப் பயணம்

0 1399

உத்திர பிரதேசம் மாநிலம் வாரணாசிக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று செல்கிறார். அங்கு பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை தொடங்கி வைக்க உள்ளார்.

மாநில தொழில் வளர்ச்சி ஆணைய உணவுப் பூங்காவில், ‘பனாஸ் பால் பண்ணைக்கு’ பிரதமர் மோடி அடிக்கல் நாட்ட உள்ளார். 30 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்த இந்தப் பால்பண்ணை சுமார் 475 கோடி ரூபாய் செலவில் கட்டப்படுவதுடன், தினந்தோறும் 5 லட்சம் லிட்டர் பாலை குளிரூட்டும் வசதிகளை பெற்றிருக்கும்.

870 கோடி ரூபாய்க்கு மேல் மதிப்புடைய 22 வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்து புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட உள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments