தஞ்சாவூரில் ஒமைக்ரான் அறிகுறிகளுடன் அரசு மருத்துவமனையில் ஒருவர் அனுமதி

0 2871

தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒமைக்ரான் தொற்று அறிகுறியுடன் ஒருவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தஞ்சை மாவட்டம் திருமங்கலக்குடி கிராமத்தைச் சேர்ந்த 50 வயது ஆண் ஒருவர் கடந்த 19ஆம் தேதி லண்டனில் இருந்து சென்னை விமான நிலையம் வந்துள்ளார். அங்கு அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்படாத நிலையில், தனது சொந்த ஊருக்கு சென்றார்.

இந்நிலையில், அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து, மீண்டும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. மேலும், அவருக்கு ஒமைக்ரான் பாதிப்புக்கான அறிகுறிகள் தென்பட்டதை அடுத்து, அவரது மாதிரிகள் மரபியல் பகுப்பாய்வு சோதனைக்காக பெங்களூருவிற்கு அனுப்பப்பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments