சென்னையில் ஸ்கூட்டியின் லாக்கை உடைத்து, 85 ஆயிரம் ரூபாய் பணத்தை மர்ம நபர் திருடி செல்லும் சிசிடிவி காட்சி.!

0 2505

சென்னையை அடுத்த பட்டாபிராமில் பட்டப்பகலில், சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டியின் லாக்கை உடைத்து, சீட்டுக்கு அடியில் இருந்த 85 ஆயிரம் ரூபாய் பணத்தை மர்ம நபர் திருடிச் சென்ற சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

ஜெயந்தி என்பவர் பட்டாபிராமில் உள்ள இந்தியன் வங்கியில் தனது நகையை அடகுவைத்து 85 ஆயிரம் ரூபாய் நகைக்கடன் பெற்றுள்ளார். பணத்தை தனது ஸ்கூட்டியில் சீட்டுக்கு அடியில் வைத்துவிட்டு, அருகே இருந்த கண் கண்ணாடி விற்பனை செய்யும் கடைக்குள் சென்றிருக்கிறார்.

இதை நோட்டமிட்ட மர்ம நபர், ஸ்கூட்டியின் லாக்கை உடைத்து பணத்தை திருடிச் சென்றார். வீட்டிற்கு சென்ற பிறகு ஸ்கூட்டியில் பணம் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்த ஜெயந்தி பட்டாபிராம் காவல்நிலையத்தில் புகாரளித்த நிலையில், அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு போலீசார் செய்ததில் மர்ம நபர் பணத்தை திருடிச் சென்றது தெரியவந்தது. 

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments