சென்னையில் 2 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை பேராசிரியர் மீது வழக்கு

0 4639

சென்னை பள்ளிக்கரணை அருகே, மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அளித்த புகாரின் பேரில் பேராசிரியர் ஆபிரகாம் அலெக்ஸ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தனியார் கல்லூரியில் படித்து வரும் இரு மாணவிகளுக்கு பேராசிரியர் ஆபிரகாம் அலெக்ஸ் பாலியல் தொல்லை கொடுத்ததாக கடந்த 6ஆம் தேதி கல்லூரி நிர்வாகத்திடம் புகார் அளிக்கப்பட்டது.

ஆனால் அவர் மீது கல்லூரி நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால், ஆத்திரமடைந்த மாணவ, மாணவிகள் நேற்றிரவு கல்லூரி வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பள்ளிக்கரணை போலீசார் புகார் அளித்தால் நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து, இரு மாணவிகள் அளித்த புகாரின் அடிப்படையில், பேராசிரியர் ஆபிரகாம் அலெக்ஸ் மீது 354 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments