ஸ்ரீபெரும்புதூரில் தரமற்ற உணவு வழங்குவதாக தனியார் செல்போன் உதிரிபாக நிறுவன பெண் ஊழியர்கள் மறியல் போராட்டம்..

0 5650
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே தனியார் நிறுவனத்தில் தரமற்ற உணவு வழங்கியதால் பாதிக்கப்பட்ட 3ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்தில் கடும்பாதிப்பு ஏற்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே தனியார் நிறுவனத்தில் தரமற்ற உணவு வழங்கியதால் பாதிக்கப்பட்ட 3ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்தில் கடும்பாதிப்பு ஏற்பட்டது.

ஸ்ரீ பெரும்புதூர் பகுதியில் செயல்படும் தனியார் செல்போன் உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் பணிபுரியும் 5000 க்கும் மேற்பட்ட பெண்கள் பூந்தமல்லியில் உள்ள விடுதியில் தங்கியுள்ளனர்.

கடந்த புதன்கிழமை அன்று விடுதியில் வழங்கப்பட்ட உணவு தரமற்ற முறையில் இருந்ததால் 100க்கும் மேற்பட்ட பெண்களுக்கு உடல் உபாதைகள் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக நேற்று காலையில் நிர்வாகத்திடம் புகார் அளித்த நிலையில் உடல்நிலை குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 8 பெண்கள் குறித்த நிலை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு நிர்வாகம் மழுப்பலான பதிலை கூறியதை அடுத்து ஆத்திரம் அடைந்த பெண்கள் அந்த 8பேரும் உயிரிழந்து இருப்பார்களா என்ற சந்தேகத்தின் பேரில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

7 மணி நேரத்துக்கும் மேலாக நள்ளிரவிலும் நடைபெற்ற இந்த போராட்டத்தினால் சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து கடுமையாக முடங்கி உள்ளது. வாகனங்கள் பல கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணி வகுத்து நின்றதால் பயணிகள் அவதிக்காளாயினர்.

இதனையடுத்து அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments