மகாராஷ்டிராவில் பாரின் பாதாள அறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 17 பெண்கள் மீட்பு

0 4878

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் பார் ஒன்றின் பாதாள அறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 17 பெண்கள் மீட்கப்பட்டனர்.

அம்மாநிலத்தில், மதுபான விடுதிகளில் பெண்கள் நடனத்திற்கு தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி அந்தேரியில் சோதனை நடத்தப்பட்டது.

சனிக்கிழமை இரவு போலீசார் பாரில் முதலில் சோதனையிட்டபோது நடனமாடும் பெண்களை கண்டுபிடிக்க முடியவில்லை. இருந்தபோதிலும், தொடர்ந்து விசாரித்து வந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துணை ஆணையர், மீண்டும் சோதனையிட்டார்.

அப்போது சந்தேகத்திற்கிடமாக பொருத்தப்பட்டிருந்த கண்ணாடியை உடைத்த போலீசார் பாதாள அறை ஒன்றை கண்டுபிடித்ததை அடுத்து, அங்கு மறைந்திருந்த பெண்களும் மீட்கப்பட்டனர்.

அந்த அறையில் ஏசி, படுக்கைகள் உள்ளிட்ட வசதிகள் இருந்ததாக தெரிவித்த போலீசார், பார் மேலாளர் உள்ளிட்டோரிடம் விசாரித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments