காகித பயன்பாடு இல்லா நிர்வாகம்-உலகின் முதல் அரசானது துபாய்

0 2690

அலுவல் பணிகளுக்கு 100 சதவிகிதம் காகிதத்தை பயன்படுத்தாத முதல் அரசாக ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மாறியுள்ளது.

துபாய் அரசின் அனைத்து உள் மற்றும் வெளி தொடர்புகள், பரிவர்த்தனைகள், சேவைகள்  அனைத்தும் டிஜிட்டல் மயமாக மாறிவிட்டதாக பட்டத்து இளவரசர் ஷேக் ஹம்தான் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் வெளியிட்ட அறிக்கையில், இனி துபாய் உலகின் முன்னணி  டிஜிட்டல் தலைநகராக விளங்கும் என குறிப்பிட்டுள்ளார்.

காகித பயன்பாடு இல்லா நிர்வாகத்தால் அரசுக்கு 350 மில்லியன் டாலர் அளவுக்கு பணம் மிச்சமாகும் என்று தெரிவித்துள்ள அவர் 14 மில்லியன் மனித வேலை மணிநேரங்களும் இதனால் லாபம் என கூறியுள்ளார். துபாய் அரசு இனி ஆயிரத்து 800 வகையான டிஜிட்டல் சேவைகள் மூலம் நிர்வகிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments