பீகாரில் பணம் வாங்கிவிட்டு தனக்கு வாக்களிக்கவில்லை என பட்டியல் இனத்தை சேர்ந்த இருவரை வேட்பாளர் துன்புறுத்துவது போல் வீடியோ வெளியீடு..

0 2083

பீகார் மாநிலம் அவுரங்கபாத்தில் பணம் வாங்கிவிட்டு தனக்கு வாக்களிக்கவில்லை என பட்டியல் இனத்தை சேர்ந்த இருவரை வேட்பாளர் துன்புறுத்துவது போல் வீடியோ வெளியான நிலையில் அவரை போலீசார் கைது செய்தனர்.

பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் தோல்வியடைந்த பல்வந்த் சிங், தன்னிடம் பணம் வாங்கிவிட்டு வாக்களிக்கவில்லை என 2 பேரை பிடித்து தோப்புக்கரணம் போடச் செய்வது போன்றும், தலையை தரையில் அழுத்தி மண்ணை நக்கச் செய்வது போன்றும் வீடியோ வெளியானது.

பல்வந்த் சிங்கை கைது செய்து விசாரித்து வருவதாக போலீசார் தெரிவித்தனர். அதேநேரம் மது போதையில் மற்றவர்களுக்கு தொந்தரவு செய்ததாகவும் அதனால்  இருவருக்கும் தண்டனை வழங்கியதாக பல்வந்த் சிங் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments