வேதாரண்யம் அருகே தொடர்ந்து அரங்கேறும் ஆடுதிருட்டு.! இரு இளைஞர்கள் கைது

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகே ஆடு திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். வேதாரண்யம் அடுத்த கரியாப்பட்டினம், செட்டிப்புலம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஒரு மாதங்களாக 20க்கும் மேற்பட்ட ஆடுகள் திருடப்பட்டன.
இந்நிலையில், இரு மர்மநபர்கள் இருசக்கரவாகனத்தில் ஆட்டைத் திருடிச்செல்லும் சிசிடிவி காட்சியை வெளியிட்ட போலீசார், திருத்துறைப்பூண்டி பகுதியைச் சேர்ந்த ஹானஸ்ட்ராஜ், ஆனந்தராஜ் என்ற இரு இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
Comments