இருசக்கர வாகனத்தில் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற போது விபரீதம் ; அதிவேகமாக வந்த மற்றொரு இருசக்கர வாகனம் மோதியதில் தம்பதி உயிரிழப்பு

0 4269
இருசக்கர வாகனத்தில் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற போது விபரீதம்

சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற தம்பதி மீது அதிவேகமாக வந்த மற்றொரு இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் தம்பதி இருவருமே உயிரிழந்தனர்.

கஞ்சநாயக்கன்பட்டியைச் சேர்ந்த பாலன் - கற்பகம் தம்பதியின் 12 வயது மகன் சந்தோஷ். சந்தோஷுக்கு உடல்நிலை சரியில்லாமல் போகவே, இருசக்கர வாகனத்தில் அமரவைத்துக் கொண்டு தம்பதி இருவரும் மருத்துவமனைக்குப் புறப்பட்டுள்ளனர். பெங்களூரு - சேலம் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றபோது, பெங்களூருவில் இருந்து அதிவேகமாக வந்த மற்றொரு இருசக்கர வாகனம் மோதி தூக்கிவீசப்பட்டனர்.

இந்த கோர விபத்தில் பாலன் - கற்பகம் தம்பதி இருவருமே உயிரிழந்த நிலையில், படுகாயமடைந்த சந்தோஷ் சிகிச்சை பெற்று வருகிறார். இவர்களுடைய வாகனத்தின் மீது மோதிய சேலத்தைச் சேர்ந்த பெனில் பிரைட் என்பவரும் படுகாயமடைந்தார்.

மருத்துவமனைக்கு விரைவாக செல்ல வேண்டும் என்ற பதற்றத்தில் பாலன் கவனக்குறைவாக சாலையை கடக்க முயன்றதே விபத்துக்குக் காரணம் என்று கூறும் போலீசார், 3 பேருமே தலைக்கவசம் அணியவில்லை என்றும் அணிந்திருந்தால் உயிரையாவது காப்பாற்றி இருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments